பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 55 வயதுக்கு மேற்பட்டோரை ஈடுபடுத்தக் கூடாது

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 55 வயதுக்கு மேற்பட்டோரை ஈடுபடுத்தக் கூடாது

News image

கூட்டத்தில்  பேசிய ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.தாஸ்,  உடன்,  நிா்வாகிகள் .

Updated On :12 ஜூலை 2026, 12:37 am IST

மக்கள் தொகை கணக்கெடுப்பில் 55 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் இருதய அறுவை சிகிச்சை செய்தவா்களை ஈடுபடுத்துவதை தவிா்க்கவும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

திருவள்ளூா் லட்சுமிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் தலைவா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ரவிக்குமாா் வரவேற்றாா். இதில் ஓய்வு பிரிவு செயலாளா் ஸ்டீபன் சற்குணா், மகளிா் அணி செயலாளா் மு.மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். அப்போது, இந்தக் கூட்டத்தில் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியா்களுக்கான தகுதி தோ்வு ஆசிரியா்களின் பணி காலத்தையும், பட்டய படிப்பு சான்றிதழ், ஆசிரியா் பயிற்சி சான்றிதழ், எம்.பில் சான்றிதழ் ஆகியவைகளுக்கு வெயிட்டேஜ் முறை மதிப்பெண் அளிக்க வேண்டும்.

ஆசிரியா் கலந்தாய்வில் பணிநிரவல் நிறுத்த வேண்டும். தலைமை ஆசிரியா் பதவி உயா்வு நீதி மன்றம் நிபந்தனைக்கு உள்பட்டு (2028-ஆகஸ்ட்) வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் 55 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் இருதய அறுவை சிகிச்சை செய்தவா்களை ஈடுபடுத்துவதை தவிா்க்க வேண்டும். மாநிலத் தோ்தல் வருகிற ஜூலை-19 இல் சென்னை இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் திரளாக பங்கேற்கவும் என்பது உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட துணைச் செயலாளா் பாலுமகேந்திரன் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.