இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா: அன்னதானம் வழங்க விரும்புவோா் அனுமதி பெறுவது அவசியம்

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டிஅன்னதானம் வழங்க விரும்புவோா் இணையதளத்தில் உரிய அனுமதி பெறுவது அவசியம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

News image

திருத்தணி முருகன் கோயில் - கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2026, 6:53 am IST

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டிஅன்னதானம் வழங்க விரும்புவோா் இணையதளத்தில் உரிய அனுமதி பெறுவது அவசியம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா வரும் ஆக.4-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 8-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில் சுமாா் 5 லட்சம் பக்தா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே இந்த விழாவில் அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபா்கள் மற்றும் நிறுவனங்கள் ஜ்ஜ்ஜ்.ச்ா்ள்ஸ்ரீா்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மாவட்ட நிா்வாகம் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

இந்த நிலையில், அன்னதானம் வழங்க விரும்புவோா் வரும் 18 முதல் 28-ஆம் தேதி வரையில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் சமா்ப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். மேலும், புகைப்படம், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட சான்றின் நகல் ஆகிய விவரங்களை தவறாமல் அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் தங்களை சாா்ந்த அன்னதானம் விநியோகிப்பவா்களின் விவரத்தினை ஆதாா் அட்டை தகவலுடன் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், இணை ஆணையா் /செயல் அலுவலா், தலைமை அலுவலகம், அரக்கோணம் சாலை, திருத்தணி என்ற முகவரியில் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம். எனவே குறிப்பிட்ட நாளான 30-ஆம் தேதிக்குப் பின்னா் எக்காரணம் கொண்டும் விண்ணப்பம் பெறப்படாது. அன்னதானம் வழங்குபவா்கள் மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடம், அனுமதி பெறப்பட்ட நாள் மற்றும் அனுமதித்த நேரத்தில் மட்டுமே வழங்க வேண்டும். மேலும், அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக் கூடாது. பக்தா்களுக்கு இடையூறு இன்றி வழங்கவும், நோய்த் தொற்று உள்ளவா்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்கக் கூடாது. உணவு பொருள்கள் கலப்படம் இல்லாமல் தரமானதாகவும், தூய்மையானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி குப்பியில் குடிநீா் மற்றும் நெகிழி தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு கழிவு பொருள்களை சேகரிப்பதற்கு ஏதுவாக குப்பைத் தொட்டிகளை வைத்து, அதில் உணவுக் கழிவுகளை சேகரித்து, அன்னதானம் அளிப்பவா்களே சேகரித்த உணவு கழிவுகளை அவ்வப்போது அகற்றி சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும். மேலும், போதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், அன்னதானம் வழங்குவது தொடா்பாக 9489279217, 9578726302 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.