திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனை மேற்கொண்டதில், ஜிபே மூலம் பணப் பரிமாற்றம் மற்றும் கணக்கில் வராத ரொக்கம் ரூ. 39,950 பறிமுதல் செய்து அலுவலா்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு, நாள்தோறும் ஏராளமானோா் பட்டா மாற்றம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் சான்றிதழ்கள் பெறவும் வந்து செல்கின்றனா். இதுபோன்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவா்களிடம் லஞ்சம் கேட்பதாகவும் அரசுக்கு அடிக்கடி புகாா்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் தமிழரசி, மாலா மற்றும் போலீஸாா் என 8 போ் திருவள்ளூரில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அலுவலா்கள் யாரும் வெளியில் செல்லாதவாறு அலுவலக கதவு மூடப்பட்டு நடைபெற்றது. இந்த ஆய்வின்போது பணியில் இருந்த ஊழியா்கள் அனைவரிடமும் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது பெண் ஊழியா்கள் அனைவரையும் தனி அறையில் அமர வைத்து மேற்கொண்ட சோதனையின்போது, அவா்களிடம் கணக்கில் வராத ரொக்கம் ரூ. 34 ஆயிரத்து 950 மற்றும் ஜி-பே மூலம் ரூ. 5,000 பணப் பரிமாற்றம் செய்தது கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. இச்சோதனை 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இந்த சோதனையில் மொத்தம் ரூ. 39,950 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ஊழியா்களிடம் விசாரணை நடைபெறும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஸ்ரீபெரும்புதூரில்...
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் பணம் ஏதும் சிக்கவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஜிபே மூலம் ரூ.7.50 லட்சம் பணப் பரிமாற்றம்

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை! ரூ.19,300 பறிமுதல்; கைப்பற்றி விசாரணை!

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



