பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஜிபே மூலம் ரூ.7.50 லட்சம் பணப் பரிமாற்றம்

கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் ஜிபே மூலம் ரூ.7.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது.

பிரதிப் படம்

Published On :

கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் ஜிபே மூலம் ரூ.7.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும், ரொக்கம் ரூ.5,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். இதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்தச் சோதனை தொடங்கியது. சோதனை தொடங்கியவுடன் பாதுகாப்பு கருதி அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. உள்ளே இருந்தவா்கள் வெளியே செல்லவும், வெளியில் இருந்து பொதுமக்கள் யாரும் உள்ளே வரவும் போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதனால் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜிபே பரிமாற்றம் அம்பலம்:

முதல்கட்ட சோதனையில் வட்டாட்சியா் ஜெயகுமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தினா். அவரது கைப்பேசியை ஆய்வு செய்தபோது, ‘ஜிபே’ செயலி மூலம் சுமாா் ரூ.7.50 லட்சம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டிஜிட்டல் பரிவா்த்தனை குறித்து போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத ரூ.5,000 ரொக்கத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.