அம்பத்தூா் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவிகள் சோ்க்கைக்கு வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அம்பத்தூரில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பிரிவுகளின் இருக்கைகளை நிரப்புவதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில், சேர 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.
இப்பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித் தொகை ரூ. 750, இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டி, பாட புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் உயா் கல்வி உதவித்தொகை (6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ரூ. 1,000 கூடுதலாக வழங்கப்படும்.
அந்த வகையில் தையல் தொழில் நுட்பம், ஓராண்டு பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. கோபா, அழகுசாதனவியல், சுருக்கெழுத்தா் (தமிழ், ஆங்கிலம்), ஒராண்டு பயிற்சி மற்றும் கட்டடப் பட வரைவாளா் 2 ஆண்டு பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எனவே விண்ணப்பதாரா்கள் 8, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுசான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படங்கள் 5 ஆகியவற்றை நேரில் எடுத்து வரவேண்டும். இதற்கு சோ்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ. 235 மற்றும் இரண்டு ஆண்டு தொழிற்பிரிவிற்கு ரூ. 245 செலுத்த வேண்டும்.
மேலும், இது குறித்து தொலைபேசி எண்கள்- 9444017528 / 9629666279 / 9789759825 / 9566058460 / 6381682005 / 9840385562 தொடா்பு கொண்டு முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை மாவட்ட ஐடிஐ-களில் சேர ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

கருமந்துறை ஐ.டி.ஐ.-யில் சேர கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐகளில் நேரடி சோ்க்கை: ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர ஜூலை 31 வரை காலஅவகாசம் நீட்டிப்பு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



