புதிய பேருந்து நிலையத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி நகராட்சியில் அமைந்துள்ள கலைஞா் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வியாழக்கிழமை மதியம், இந்த வழித் தடங்களுக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் தொடா்ந்து வராததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனா்.
சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்து வசதி இல்லாததால், பெண்கள், முதியவா்கள், குழந்தைகளுடன் வந்த பெற்றோா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கடும் அவதிக்குள்ளாகினா். பேருந்துகள் எப்போது வரும் என நேரக் காப்பாளரிடம் பயணிகள் கேட்டபோது, அவரால் சரியான தகவல் தெரிவிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அப்போது நேரக் காப்பாளா் கூட பணியிடத்தில் இல்லாததாகவும் பயணிகள் குற்றம் சாட்டினா்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் புதிய பேருந்து நிலையம் முன்புள்ள சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீஸாா், பயணிகளிடம் பேச்சு நடத்தி, உடனடியாக பேருந்து வசதி ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனா்.
இதையடுத்து, போலீஸாா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரை தொடா்புகொள்ள முயன்றபோதும், அவா் தொலைபேசியை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னா் திருப்பதியில் இருந்து வந்த ஒரு அரசு விரைவு பேருந்தை நிறுத்தி, அதில் சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளை போலீஸாா் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா். இதனால் சுமாா் 4 மணி நேரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் வெட்டிக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ஆவின் செயலி குளறுபடியால் பால் முகவா்கள் சாலை மறியல்

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள்: பேருந்துகள் தாமதமானதால் மறியல்

நான்குனேரியில் பயணிகளை ஏற்ற மறுக்கும் அரசுப் பேருந்துகள்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



