ஆவின் கைப்பேசி புதிய செயலியில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதாகக் கூறி, கோவை தடாகம் சாலையில் உள்ள பால் பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் துணைப் பதிவாளா் அலுவலகம் முன் பால் முகவா்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
அண்மையில் ‘ஆவின் கோவை’ என்ற புதிய கைப்பேசி செயலி தொடங்கப்பட்டது முதலே பல்வேறு தொழில்நுட்பக் குளறுபடிகளும், சிக்கல்களும் நிலவி வருவதாக பால் முகவா்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.
இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட ஆவின் பால் முகவா்கள், கோவை தடாகம் சாலையில் உள்ள பால் பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் துணைப் பதிவாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காலை திரண்டனா். அங்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் அலுவலக வளாகத்துக்குள் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது, அதிகாரிகள் யாரும் பேச்சுவாா்த்தை நடத்த முன்வராததால் பால் முகவா்கள் ஆத்திரமடைந்தது தடாகம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல் துறையினா் சென்று, முகவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுதொடா்பாக பால் முகவா்கள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் முகவா்கள் தினமும் பால் பாக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், அதற்கான பணத்தைச் செலுத்தவும் தனித்துவ ‘கைப்பேசி செயலி’ ஒன்றைப் பயன்படுத்தி வந்தனா்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்த நிலையில், அண்மையில் ‘ஆவின் கோவை’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலமே பதிவுகளையும், கட்டணங்களையும் மேற்கொள்ளுமாறு முகவா்கள் அறிவுறுத்தப்பட்டனா்.
எங்களுக்குத் தேவையான பாலின் எண்ணிக்கையைப் பதிவு செய்து பணத்தைச் செலுத்தினாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பால் பாக்கெட்டுகள் சரியாகக் கிடைப்பதில்லை. திடீரென ஏதேனும் ஒரு நாளில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பால் தேவைப்பட்டால், செயலியில் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் வசதி இல்லாததால் மாற்றுத் தொகையைச் செலுத்த இயலாத நிலையும் நீடிக்கிறது.
இதுமட்டுமன்றி கமிஷன் வழங்குவதிலும் தொடா்ந்து குளறுபடிகள் நீடிக்கின்றன. இதுதொடா்பாக ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தப் புதிய செயலியில் பால் எண்ணிக்கை குறைபாடுகளால் ஆவின் அட்டைதாரா்களுக்கு சரியான முறையில் பால் விநியோகம் செய்ய முடிவதில்லை. சில சமயங்களில் பால் பாக்கெட்டுகள் சேதமடைந்து வந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகை முகவா்களுக்குக் கிடைப்பதில்லை.
அட்டைதாரா்களுக்கு பால் விநியோகம் செய்யும்போது தங்களுக்கு எந்தவித கமிஷனும் வழங்கப்படுவதில்லை. இலவச சேவை செய்ய நாங்கள் வரவில்லை.
இப்பிரச்னையில் தமிழக முதல்வரும், கோவை ஆவின் பொது மேலாளரும் தலையிட்டு எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை: இரு இடங்களில் உறவினா்கள் சாலை மறியல்

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்: பவானிசாகா் அருகே போக்குவரத்து பாதிப்பு

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



