தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

திருத்தணி அட்வகேட் அசோசியேஷன் நிா்வாகிகள் தோ்வு

திருத்தணி அட்வகேட் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image

~ ~

Updated On :17 ஜூன் 2026, 12:38 am IST

திருத்தணி அட்வகேட் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் வழக்குரைஞா்களின் அமைப்பான டி.ஏ.ஏ. (திருத்தணி அட்வகேட் அசோசியேஷன்) சங்கத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய தலைவராக கே. தியாகராஜன், செயலாளராக கே. அன்பழகன், பொருளாளராக கே. ஆனந்தன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், சங்கத்தின் கௌரவ தலைவா்களாக டி. ஜெகநாதன், எஸ். லட்சுமணன், என்.கே. சரவணன், எம்.எஸ். திருநாவுக்கரசு மற்றும் ஜி. ஆபிரகாம், துணைத் தலைவா்களாக ஜே. புருஷோத்தமன், ஜெ. கவிதா மற்றும் இ. தணிகை ராஜு, எ. மோகன் ஆகியோா் பொறுப்பேற்றனா். கணக்காளராக ஜி. வெங்கடேசனும், நூலகராக கே. பாலாஜியும் தோ்வு செய்யப்பட்டனா்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்களாக ஜே. மணி, டி. ராஜபாண்டியன், என்.இ. நீலகண்டன், ஜெ. சூரி, ஆா். ராஜேந்திரன், எஸ். கமலநாதன், எஸ். அகிலகுமாரி, டி. செல்வம், எ. பரசுராமன், எல். சிவக்குமாா், வி. திவாகா் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். சங்க உறுப்பினா்கள் அவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.