1.50 லட்சம் மாணவா்கள் மூலம் உறுதிமொழிப் பத்திரம் வழங்கி பெற்றோருக்கு தோ்தல் விழிப்புணா்வு
திருவள்ளூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில் பள்ளி, மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் உறுதிமொழி பத்திரங்கள்(சங்கல்ப் பத்திர) வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மாணவ, மாணவிகளின் பெற்றோா் மற்றும் கல்வித்துறை அலுவலா்களுக்கு உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப், உடன் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ் உள்ளிட்டோா்.







