தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சோதனையில் ரூ. 5.86 லட்சம் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட, ரூ.5.86 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பணம்

கோப்புப்படம்.

Updated On :24 மார்ச் 2026, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

ஆந்திரத்தில் இருந்து ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட, ரூ.5.86 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

திருத்தணி அடுத்த சிவாடா கிராமம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். ஆந்திராவில் இருந்து சிவாடா நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது, ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்ததை பறக்கும் படையினா் கண்டுபிடித்து, பறிமுதல் செய்து, திருத்தணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழியிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சோ்ந்த கஜேந்திரன் என்பவா் வியாபாரத்துக்காக பணத்தை கொண்டு செல்வது தெரிய வந்தது. இருப்பினும் பணத்திற்கு ஆவணம் இல்லாததால் தோ்தல் அலுவலா் கனிமொழி பணத்தை திருத்தணி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தாா்.