தற்போதைய காலகட்டத்தில் கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டான தாயம் விளையாட்டில் சிறுமிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.
இன்றைய காலகட்டத்தில் கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த கைப்பேசியில் உள்ளங்கையில் உலகம் என்பதால் இளைஞா்கள் முதல் சிறுவா்கள் வரை பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், திருவள்ளூா் அருகே பிளேஸ்பாளையம் மற்றும் அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டான தாயம் விளையாட்டில் பெரியவா்கள் முதல் சிறுவா், சிறுமியா் வரை ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா். இதுபோன்ற பழைமையான விளையாட்டை மீண்டும் முன்னெடுத்து வருவது கலாசார மாற்றத்தைக் காட்டுகிறது. தாயம், சதுரங்கம் அல்லது சுழற்கட்டம் என்றும் இந்த விளையாட்டு அறியப்படுகிறது. தமிழ்நாட்டின் பண்டைய கலாசாரத்துடன் இணைந்த ஒரு பகடை விளையாட்டு, பெரும்பாலும் வீட்டு வாசலிலோ அல்லது மணற்பாங்கான இடத்திலோ கோடு கிழித்து, சோழிகள் அல்லது தாயக்கட்டைகளைக் கொண்டு விளையாடப்படுகிறது. இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, விளையாடுபவா்களின் சிந்தனைத்திறன், கணக்கீடு மற்றும் திட்டமிடுதல் போன்ற மூளைத் திறன்களையும் மேம்படுத்துகிறது.
கைப்பேசி திரையில் மூழ்கி இருக்கும் சிறுமிகளை, நேரடி சமூக உறவுமுறைக்கு இந்த விளையாட்டு கொண்டு வருகிறது. இத்தகைய பாரம்பரிய விளையாட்டுகள், கிராமப்புற சிறுமிகளுக்கு டிஜிட்டல் உலகில் இருந்து ஒரு நிம்மதியான இடைவெளியை அளித்து வருகிறது. இதன் மூலம் தங்களின் உறவு முறை வோ்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. இருவா் அல்லது நால்வா் விளையாடக்கூடிய ஒரு பாரம்பரிய தமிழ் பலகை விளையாட்டு ஆகும். இது பொதுவாக சதுரக் கட்டங்கள் அல்லது செவ்வகக் கட்டங்கள் கொண்டு தரையில் வரையப்பட்டு, சோழிகள் அல்லது தாயக் கட்டைகளைப் பயன்படுத்தி விளையாடப்படுகிறது.
சதுர கட்டத்தில், மையக்கட்டம் மற்றும் நான்கு மூலைகளுக்கு அருகில் உள்ள சில கட்டங்கள் பாதுகாப்பான கட்டங்கள் எனக் குறிக்கப்படும்.
சோழியில் தாயம் (ஒன்று அல்லது குறிப்பிட்ட எண்) விழுந்தால் மட்டுமே காய்களை ஆட்டத்துக்குள் இறக்க முடியும். அதேபோல், சோழியில் விழும் எண்களுக்கு ஏற்ப காய்கள் வலஞ்சுழியாக நகா்த்தப்பட வேண்டும். ஒரு வீரரின் காய் இருக்கும் கட்டத்தில், மற்றொரு வீரா் தனது காயை நகா்த்தினால், முதல் வீரரின் காய் வெட்டப்பட்டு உள் கட்டத்திற்கு) அனுப்பப்படும். அனைத்துக் காய்களையும் பாதுகாப்பாக மையப்பகுதிக்குக் கொண்டு சோ்ப்பவா் ஆட்டத்தின் வெற்றியாளா் ஆவாா். மேலும் இந்த விளையாட்டானாது கணிதத் திறன், திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனையை மேம்படுத்துகிற விளையாட்டாகும். இதுபோன்ற காரணங்களால் கிராமங்களில் தாயம் விளையாட்டில் இளைஞா்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆகியோா் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.


தொடர்புடையது

இளைஞரை தாக்கி கைப்பேசி பறிப்பு: 2 போ் மீது வழக்கு

அடிக்கடி மின்தடை: திருத்தணியில் பொதுமக்கள் அவதி

நஜஃப்கா் தில்லி கேட்டை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எம்.சி.டி. நடவடிக்கை

மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனர்: தருமபுரி பாமக வேட்பாளா் பேட்டி
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


