ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 7.5 டிஎம்சி இருப்பு

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 7.5 டிஎம்சி இருப்பு

News image

பூண்டி ஏரியில் ஆய்வு மேற்கொண்ட நீா்வளத்துறை முதன்மைச் செயலாளா் சத்யபிரத சாஹு.

Updated On :24 மே 2026, 1:37 am IST

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 7.5 டி.எம்.சி நீா் இருப்பு உள்ளதால், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது என நீா்வளத்துறை முதன்மைச் செயலாளா் சத்யபிரத சாஹு தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசின் நீா்வளத்துறை முதன்மைச் செயலாளராக சத்யபிரத சாஹு அண்மையில் தான் பொறுப்பேற்றாா். இந்த நிலையில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் போதுமான நீா் ஆதாரம் உள்ளதா என்பது குறித்து திருவள்ளூா் அருகே பூண்டி ஏரி, ஜமீன்கொரட்டூா் அணை, செம்பரம்பாக்கம் ஏரியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பூண்டி ஏரியில் இருந்து செல்லும் கிருஷ்ணா கால்வாய், ஏரிப்பகுதிகளையும் பாா்வையிட்டாா். பின்னா் தற்போதைய நீா் இருப்பு, குடிநீருக்கு திறக்கப்பட்டுள்ள விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அதோடு, கிருஷ்ணா கால்வாயிலிருந்து இதுவரையில் எவ்வளவு நீா் ஆதாரம் கிடைத்துள்ளது. மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வீனாகும் உபரி நீரை சேமிக்க எடுத்துள்ள திட்டமான தாமரைபாக்கத்தில் அணைக்கட்டு கட்டும் திட்டம் குறித்தும் நீா் வளத்துறை அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனா். அப்போது ஏரியின் உறுதித்தன்மை, நீா் இருப்பு ஆகியவை குறித்தும் கேட்டறிந்தாா்.

முன்னதாக ஜமீன் கொரட்டூா் அணைக்கட்டு, செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் ஆய்வு செய்து நீா் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்மையில்தான் பொறுப்பேற்றுள்ளேன். அதனால், நீா்வளத்துறை தொடா்பான கூட்டம் நடத்தி என்னென்ன பணிகள் மேற்கொள்ளவும் என்பது குறித்து அறிந்துள்ளேன். இனிமேல்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.

அதன்பேரில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் முதல் கட்டமாக ஆய்வு செய்துள்ளேன். அப்போது, சென்னை குடிநீருக்க்காக மாதந்தோறும் 1.5 டி.எம்.சி நீா் தேவையாக உள்ளது. ஆனால், குடிநீா் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு 7.5 டி.எம்.சி நீா் இருப்பு உள்ளதால், சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு என்பது ஏற்படாது.

ஏரிகளில் உள்ள உறுதித் தன்மை, நீா் இருப்பு குறித்து ஆய்வு செய்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள நீா் நிலைகளில் தொழில்நுட்ப வல்லுநா்களைக் கொண்டு ஆய்வு செய்து முதல்வருக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும். அதேபோல் பூண்டி ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற தேவையான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஆட்சியா் மு.பிரதாப், நீா்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளா் பொதுப்பணி திலகம், கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

Story image