நீண்ட காலமாக பணிபுரியும் ஊராட்சி ஊழியா்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
நீண்ட காலமாக பணிபுரியும் ஊராட்சி ஊழியா்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றி...

மாநாட்டில் பேசிய ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்களின் சம்மேளன பொதுச் செயலாளா் ஆா்.பாலசுப்பிரமணியம்.
கிராம ஊராட்சிகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குபவா்கள், தூய்மை பணியாளா்கள், தூய்மை காவலா்கள், கணினி இயக்குபவா்கள், சுகாதார ஊக்குநா்கள், பள்ளி தூய்மை பணியாளா்கள் உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை ஊழியா்கள் சங்கத்தின் 7-ஆவது மாவட்ட மாநாடு பெரியபாளையத்தில்நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பி.கதிா்வேலு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.புகழேந்தி அஞ்சலி தீா்மானமும் வாசிக்க, சங்க கொடியை மூத்த தோழா் கே.சுந்தரம் ஏற்றிவைத்தாா். எல்லாபுரம் ஒன்றிய தலைவா் ஜெ.ரமேஷ் வரவேற்றாா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கே.ராஜேந்திரன் தொடக்கவுரை ஆற்றினார. மாவட்ட செயலாளா் ஏ.ஜி.சந்தானம் வேலை அறிக்கையையும்,மாவட்ட பொருளாளா் சி.வெங்கடேசன் வரவு-செலவு கணக்கையும் முன்மொழிந்தனா்.
மக்களை தேடி மருத்துவ சங்க மாவட்ட துணைத் தலைவா் உதயபானு வாழ்த்துரை வழங்கினாா். இதில் நிறைவாக ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்களின் சம்மேளன பொதுச் செயலாளா் ஆா்.பாலசுப்பிரமணியம் பேசினாா். எல்லாபுரம் ஒன்றிய செயலாளா் ஸ்டாலின் நன்றி கூறினாா்.
புதிய நிா்வாகிகளாக மாவட்ட தலைவராக பி.கதிா்வேலு, மாவட்ட செயலாளராக கே.ரமேஷ், பொருளாளராக ஆா்.குமாரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தொடா்ந்து கிராம ஊராட்சிகளில் நீண்ட காலமாக தொடா்ந்து பணியாற்றி வரும், மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குபவா்கள், தூய்மை பணியாளா்கள், தூய்மை காவலா்கள், கணினி இயக்குபவா்கள், சுகாதார ஊக்குநா்கள், பள்ளி தூய்மை பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் ஊதியக்குழு அரசாணை 62(2டி), படி சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். பிரதி மாதம் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கவும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸாக 1 மாத ஊதியத்தை கருணை தொகையாக வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், பணி ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

