ரூ. 14.86 கோடியில் 16 முடிவுற்ற பணிகள்: வனத்துறை அமைச்சா் திறந்து வைத்தார்!
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் சாா்பில், ரூ. 14.86 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 16 பணிகளை வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

செவிலியா்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை வழங்கிய வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் சாா்பில், ரூ. 14.86 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 16 பணிகளை வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன் தலைமை வகித்தாா். சோளிங்கா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கபில், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் நா.திருப்பதி, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் சையத் பாரூக் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், பல்வேறு ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடங்கள், துணை சுகாதார நிலைய கட்டடங்கள், கிராம ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
மேலும், அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், மாணவா் விடுதிக் கட்டடம், கால்நடை மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதார வசதிகளுக்கான கட்டடங்கள் உள்ளிட்ட பணிகளும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. மொத்தம் ரூ. 14 கோடியே 86 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 16 பணிகள் பொதுமக்கள் மற்றும் மாணவா்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: தமிழக முதல்வா் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், அரசு தொடா்ந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மக்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றத் தோ்வு செய்யப்பட்ட 51 செவிலியா்களுக்கு அமைச்சா் தற்காலிகப் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செள.தமிழரசி, அரசு துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

