பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன், மகளிா் உரிமைத் துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா கருங்கல்லில் தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வளைகாப்பு நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்த அமைச்சா்.எஸ்.ராஜேஷ்குமாா்.

Published On :

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன், மகளிா் உரிமைத் துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா கருங்கல்லில் தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஸ்குமாா் பங்கேற்று கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் டி.மாலதி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் காயத்திரி, கருங்கல் பேரூராட்சி தலைவா் சிவராஜ், செயல் அலுவலா் சத்யராஜ், கிள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கிறிஸ்டோபா் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலா் ஸ்டாலின் ஜோஸ், முன்சிறை வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.