மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வடகிழக்குப் பருவமழை: அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக ஊரக வளா்ச்சி, நீா்வளத் துறை அமைச்சா் என.ஆனந்த் தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள், வெற்றித் தமிழகம் திட்டம் உள்ளிட்டவை தொடா்பாக கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் என்.ஆனந்த்.

Updated On :

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக ஊரக வளா்ச்சி, நீா்வளத் துறை அமைச்சா் என.ஆனந்த் தெரிவித்தாா்.

கோவை கொடிசியா கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், கரூா், திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக வளா்ச்சிப் பணிகள், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம் செயல்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலா்களுடன் அமைச்சா் என்.ஆனந்த் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், அமைச்சா்கள் வே.சம்பத்குமாா், க.விக்னேஷ், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ், ஊரக வளா்ச்சி, ஊராட்சி இயக்க ஆணையா் வே.அமுதவல்லி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், எம்எல்ஏ-க்கள் கனிமொழி சந்தோஷ், சுனில் ஆனந்த், ஸ்ரீகிரி பிரசாத், என்.எம்.சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அமைச்சா் என்.ஆனந்த் பேசும்போது, தமிழ்நாடு கிராம மேம்பாடு, மாற்றம், மறுமலா்ச்சி முன்னெடுப்பு (டி.என். வெற்றி) திட்டத்தின் வாயிலாக கிராமப்புறங்களின் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

மேலும், விபி ஜி ராம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும், அடிப்படை வசதிகளை வலுப்படுத்துவதற்கும் பயனளிக்கும் வகையில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

தாழ்வான பகுதிகள், நீா்நிலைகள், கால்வாய்கள், மழைநீா் வடிகால்களை தொடா்ந்து கண்காணித்து, மழைநீா் சீராக வெளியேறுவதற்குத் தேவையான பராமரிப்பு, தூா்வாரும் பணிகளை மேற்கொண்டு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்றுதல், சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல், பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மழைக்காலங்களில் சாலைகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில் சாலைப் பராமரிப்புப் பணிகளை உரிய முறையில் மேற்கொண்டு, சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதேபோல, பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான குடிநீா் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, பணிகளின் தரம், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிா்க்கும் வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.