காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

வடகிழக்குப் பருவமழை: வடதமிழகத்தில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு இருக்கும்! முழு விவரம்!

வடதமிழகத்தில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

rain

வடகிழக்குப் பருவமழை: வடதமிழகத்தில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு இருக்கும்! - படம்: PTI

Published On :

எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) காலத்தில் வடதமிழகத்தில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2026 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) காலத்திற்கான முன்னறிவிப்பு:

2026 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை), தென் தீபகற்ப இந்தியாவைச் சேர்ந்த 5 வானிலை துணைப்பிரிவுகளான தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம், ராயலசீமா, கேரளம் மற்றும் மாஹே, தெற்கு உள்கர்நாடகம் ஆகிய பகுதிகளில் பருவகால மழைப்பொழிவு இயல்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால சராசரியின் (LPA) 88-112% அளவில் இருக்கும்.

இந்தப் பருவத்தில், கேரளத்தின் தெற்குப் பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டில் இயல்பானது முதல் இயல்பைவிட அதிகமான மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது. மீதமுள்ள பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட குறைவான மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது.

அக்டோபர் 2026-ல், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் பல பகுதிகள், வட தமிழ்நாட்டின் சில பகுதிகள் மற்றும் கேரளத்தின் மலைப்பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பைவிட அதிகமான மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது. இப்பகுதியின் மீதமுள்ள பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட குறைவான மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது.

2026 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தென் தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் இயல்பைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

தற்போது பூமத்திய ரேகையை ஒட்டிய பசிபிக் பெருங்கடல் பகுதியில் வலுவான எல்-நினோ நிலை நிலவி வருகிறது. குறிப்பாக மத்திய-கிழக்கு மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியைவிட கணிசமாக அதிகமாக உள்ளது. கடல்-வளிமண்டல இணைந்த அமைப்பும் வலுவான எல்-நினோ நிலைக்கு ஒத்த தன்மையை வெளிப்படுத்துகிறது.

பருவமழை இயக்கம் தொடர்பான ஒருங்கிணைந்த முன்னறிவிப்பு அமைப்பு ( MMCFS) மற்றும் பிற முக்கிய உலகளாவிய காலநிலை மாதிரிகளின் முன்னறிவிப்புகளின்படி, எல்-நினோ நிலை ஆண்டு இறுதி வரை மேலும் வலுப்பெற்று, அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் தொடர வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியப் பெருங்கடலில் நடுநிலை இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை (Indian Ocean Dipole - 10D) நிலவி வருகிறது. சமீபத்திய MMCFS முன்னறிவிப்பின்படி, வடகிழக்குப் பருவமழைக் காலத்திலும் நடுநிலை IOD நிலை தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Regional Meteorological Centre has stated that North Tamil Nadu will receive above-normal rainfall during the upcoming Northeast Monsoon season (October to December).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.