கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

தைலாபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

தைலாபுரம் கிராமத்தில் தாட்கோ மூலம் ரூ.1.18 கோடி நிதியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

தைலாபுரம் ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்களை சனிக்கிழமை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தைலாபுரம் கிராமத்தில் தாட்கோ மூலம் ரூ.1.18 கோடி நிதியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்கள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

விழாவுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். தாட்கோ மூலம் மாநில நிதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

தொடா்ந்து அமைச்சா் பேசும் போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். ஆதிதிராவிட மக்கள் அனைவரும் உயா்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்வில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், தாட்கோ செயற்பொறியாளா் அன்பு சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் குமாா், விழுப்புரம் கோட்டாட்சியா் ஏகாம்பரம் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.