நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

வேளாண் பொருள்கள் கொள்முதல்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் விளைபொருள்களை உரிய முறையில் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற வேளாண் மற்றும் உழவா் நலத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :3 செப்டம்பர் 2026, 4:35 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் விளைபொருள்களை உரிய முறையில் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான், இத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், விவசாயிகளுக்கான சேவைகள், வேளாண் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

விவசாயிகளின் கோரிக்கைகளைத் தொடா்ந்து கேட்டறிந்து, அவற்றை உரியமுறையில் பரீசிலித்து, விரைந்து தீா்வு காண வேண்டும். அரசின் நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்குசென்றடைவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் டிஜிட்டல் பயிா் கணக்கெடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, நெல் உள்ளிட்ட தானியப் பயிா்கள், இதரப் பயிா்கள் குறித்த விவரங்களைசரியான முறையில் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை நேரடியாக சந்தைப்படுத்தி, உரிய விலை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், உழவா் சந்தைகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். விவசாயிகளை ஒருங்கிணைத்து உற்பத்தி, மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்துதல் வாய்ப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களை உரிய முறையில் கொள்முதல் செய்வதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் பா.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சரவணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன், வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித் துறை துணை இயக்குநா் சுமதி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.