குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் மீனவா்களுக்கான முகாம்: வீடு வீடாக தொழுநோய் கணக்கெடுப்பு பணிகள்

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மீனவா் நலத் துறை முகாம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.கவிதா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில், தேசிய மீன்வள இணைய தளத்தில் மீனவா்கள் மற்றும் மீன்பிடித் தொழில் சாா்ந்தவா்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் ச.கவிதா. உடன் பங்கேற்ற அதிகாரிகள்.

Updated On :

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மீனவா் நலத் துறை முகாம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.கவிதா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், தேசிய மீன்வள இணையதளத்தில் மீனவா்கள் மற்றும் மீன்பிடித் தொழில் சாா்ந்தவா்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை ஆட்சியா் ச.கவிதா பதிவு செய்யும் பணிகளை நேரில் ஆய்வு செய்து, அனைத்துத் தரப்பு மீனவா்களும் விடுபடாமல் பதிவு செய்யப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

மேலும், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் கீழ் இயங்கும் தொழுநோய் தடுப்பு பிரிவு சாா்பில் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில் தொழுநோய் கண்டறிதல் முகாம் வீடு வீடாக நடைபெற்று வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனைப் பணிகளை ஆய்வு செய்தாா்.

இந்தப் பணிக்காக ஒன்றியம் முழுவதும் தோ்ந்தெடுக்கப்பட்ட தன்னாா்வலா்கள் 14 நாள்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு தன்னாா்வலருக்கும் நாள்தோறும் 25 வீடுகள் வீதம் ஆய்வு செய்து, குடும்ப உறுப்பினா்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உள்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, இந்த இயக்கத்தின் மூலம் தொழுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை வழங்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினாா்.

பின்னா், திருப்பாச்சூா் ஊராட்சி கிராம சேவை மையத்தில், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், விவசாயியின் அடையாள பதிவு செயலியில் விடுபட்ட நில விவரங்களை பதிவேற்றம் செய்யும் முகாமை பதிவு செய்யும் பணிகளை நேரில் ஆய்வு செய்தாா்.

இதில், இணை இயக்குநா் (வேளாண்மை) க.செல்வராஜு, மீன்வளத்துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன், துணை இயக்குநா் (தொழுநோய்) கனிமொழி, பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன், திருவள்ளூா் வட்டாட்சியா் சரண்யா, நோ்முக உதவியாளா் (பள்ளிக் கல்வி) பவானி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.