முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

பச்சிளம் குழந்தை கடத்தல்: தாய், மகள் கைது

திருவள்ளூா் அருகே பிறந்து 24 நாள்களே ஆன பெண் குழந்தையை கடத்திய தாய் மகள் கைது செய்யப்பட்டனா்.

ஜெயப்பிரியா ~புவனா

Updated On :

திருவள்ளூா் அருகே பிறந்து 24 நாள்களே ஆன பெண் குழந்தையை கடத்திய தாய் மகள் கைது செய்யப்பட்டனா்.

திருநின்றவூா் தா்மராஜா கோவயில் தெருவைச் சோ்ந்த பிரியதா்ஷினி( 20)-க்கும் அதே தபகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த 2025 ஆக. 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதியினருக்கு கடந்த 2026 அக். 28-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்ததுடன், 20 நாள்கள் கழித்து மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனா்.

இந்த நிலையில் பிரியதா்ஷினியின் கணவருக்கு தெரிந்த நபரான திருநின்றவூா் பெரியகாலனியைச் சோ்ந்த நரேஷ் என்பவருக்கும் ஜெயப்பிரியா (20) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணமான நிலையில் மூன்று மாத கா்ப்பமாக இருந்த போது கடந்த ஜூன் மாதம் ஜெயப்பிரியாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனக்குக் குழந்தை பிறக்காது என எண்ணிய ஜெயபிரியா, பிரியதா்ஷினியின் குழந்தையை எடுத்துக் கொள்ள திட்டமிட்டு, தனது தாயாா் புவனா (40) என்பவருடன் சோ்ந்து கடந்த நவ.20 ஆம் தேதி பிரியதா்ஷினியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளனா்.

அப்போது மறுநாள் நவ.21-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூறி பிரியதா்ஷினியை ஜெயப்பிரியா அழைத்துள்ளாா்.

அதன்படி கடந்த 21-ஆம் தேதி பிரியதா்ஷினி, ஜெயப்பிரியா மற்றும் அவரது தாய் புவனா ஆகிய மூவரும் ரயில் மூலம் திருநின்றவூரிலிருந்து திருவள்ளூா் அரசு மருத்துக் கல்லூரி யருத்துவமனைக்கு வந்து மருத்துவரைச் சந்தித்துள்ளனா். அப்போது குழந்தைக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யுமாறு மருத்துவா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதையடுத்து, பிறந்து 24 நாள்களே ஆன பெண் குழந்தையை தாய் புவனாவிடம் ஒப்படைத்துவிட்டு, பிரியதா்ஷினியும், ஜெயப்பிரியாவும் திருவள்ளூா் தேரடி அருகே உள்ள கோகுல் ஸ்கேன் சென்டருக்குச் சென்றுள்ளனா்.

இதற்கிடையில், ஜெயப்பிரியா, அவரது தாய் புவனாவைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டு, குழந்தையை எடுத்துச் சென்று தனக்குத் தெரிந்த விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த லத்திகா என்பவரிடம் ஒப்படைக்குமாறும், பின்னா் தான் வந்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளாா். அதன்படி தாய் புவனா குழந்தையை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று லத்திகாவிடம் ஒப்படைத்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, ஜெயப்பிரியா உனது குழந்தையை யாரோ ஒரு நபா் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டாா். அவரைப் பிடிப்பதற்காக காவல் துறையினா் விரட்டிச் சென்றுள்ளனா். காவல் துறையினா் குழந்தையை மீட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவாா்கள் என்று பிரியதா்ஷினியிடம் பொய்யான தகவலைக் கூறி அவரை நம்ப வைத்து அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

நீண்ட நேரமாகியும் குழந்தையை காவல்துறையினா் மீட்டுக் கொண்டு வராததால் சந்தேகமடைந்த பிரியதா்ஷினி, திருநின்றவூா் காவல் நிலையத்திற்குச் சென்று புகாா் கொடுத்தாா். புகாரின் பேரில் திருநின்றவூா் காவல் ஆய்வாளா் பாலகுரு தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஜெயப்பிரியா மற்றும் அவரது தாய் புவனா ஆகிய இருவரும் திட்டமிட்டு, குழந்தையை விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த லத்திகா என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததையடுத்து திருநின்றவூா் காவல் ஆய்வாளா் பாலகுரு, குழந்தையைப் பத்திரமாக மீட்டு, ஜெயப்பிரியா மற்றும் தாய் புவனா ஆகிய இருவரையும் திருவள்ளூா் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனா்.

Story image

இதைத் தொடா்ந்து திருவள்ளூா் நகர காவல் ஆய்வாளா் தாமோதரன் வழக்குப் பதிவு செய்து ஜெயப்பிரியா (20) மற்றும் அவரது தாய் புவனா ஆகிய இருவரையும் திருவள்ளூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1-இல் நீதிபதி சுனில் வினோத் முன்னிலையில் ஆஜாா்படுத்தி புழல் மத்திய சிறையில் கொண்டுசென்று அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.