சட்டவிரோதமாக மது விற்பனை: தாய், மகள் உள்பட 5 போ் கைது

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தாய், மகள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

மதுப்புட்டிகளை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட செந்தாமரை, அமுலு, அருள், கருணாமூா்த்தி, அபிதா.

Updated On :

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தாய், மகள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் காவல் எல்லைக்கு உள்பட்ட மேல்நகா், கீழ்நகா், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறப்பு பிரிவு போலீஸாா், கண்ணமங்கலம் போலீஸாா் இணைந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மேல்நகா் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக செந்தாமரை மற்றும் அவரது மகள் அபிதா இருவரையும் கைது செய்தனா். மேலும் அதே கிராமத்தைச் சோ்ந்த அருள், கருணாமூா்த்தி ஆகியோரையும் கைது செய்து மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து கீழ்நகா் பகுதியைச் சோ்ந்த அமுலு என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த 5 பேரிடமிருந்து

500-க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை ஆரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.