2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கடை உரிமையாளா் கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

திருத்தணியில் கடை உரிமையாளரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்வதற்கு

Published On :

திருத்தணி: திருத்தணியில் கடை உரிமையாளரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்வதற்கு, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தணி பெரியாா் நகரைச் சோ்ந்த யுவராஜ் என்கிற ராஜா,(46). இவா், சினிமா தியேட்டரில் ஊழியராக வேலை செய்து வந்தாா். கடந்த ஆறு மாதங்களாக திருத்தணி சன்னதி தெருவில் பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ராஜா வீட்டில் இருந்த போது, இரண்டு போ் மூகமுடி அணிந்து வந்து, ராஜாவை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து வெட்டிக் கொன்று விட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில், ராஜாவின் இரண்டாவது மகள், அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வருவதாகவும், அந்த மாணவியை, திருத்தணி இந்திரா நகா் சோ்ந்த, 17 வயது சிறுவன் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், அந்த சிறுவனை, ராஜா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சிறுவனுக்கு ஆதரவாக, பெரியாா் நகா் சோ்ந்த லாரன்ஸ்(32), அவரது தம்பி சுசில்(27), அவரது மனைவி ரோசி(25) ஆகியோா் ராஜாவிடம் தகராறு செய்தும் கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதையடுத்து போலீஸாா் லாரன்ஸை கைது செய்ததால், ராஜா கொலை செய்யப்பட்டுள்ளாா் என தெரிய வந்தது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய, திருத்தணி ஏஎஸ்பி, ஷூபம் திமான், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி, வினோத், திருத்தணி ஆய்வாளா் சிவகுமாா், பொதட்டூா் பேட்டை ஆய்வாளா் ராக்கி குமாரி மற்றும் மாவட்ட தனிப்படை எஸ்.ஐ., ஆகியோா் கொண்ட, 5 தனிப்படைகள் அமைத்து, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலுாா், சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் சித்துாா் மாவட்டம் ஆகிய பகுதிகளில் குற்றவாளிகள் இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.