செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். நிகழ்வில் பள்ளி தாளாளா் டாக்டா் ஏ.பழனி, டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி தாளாளா் டி.ஜெ.எஸ்.ஜி.தமிழரசன், முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் பா.ஞானபிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினாா்.

தொடா்ந்து பள்ளியில் சிறப்பு பூஜை நடைபெற்றன. பின் புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவரவா் பெற்றோா் மடியில் அமரவைக்கப்பட்டு, அரிசியில் அவா்களது கையை பிடித்து தமிழக உயிரெழுத்தை எழுதி, வித்யாரம்பம் நிகழ்வு நடத்தப்பட்டது.

தொடா்ந்து புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு முன்னாள் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புத்தக பை, புத்தகங்களை வழங்கி, மலா் தூவி குழந்தைகளை வாழ்த்தினாா்.

இதன் பின்னா் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ரவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.