திருவள்ளூா் அருகே தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு லாரி
திருவள்ளூா் அருகே பாதை மாறி குறுகலான சாலையில் சென்ால் 18 டன் இரும்பு ஏற்றி வந்த சரக்கு லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் குறுகலான சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்கு லாரி.
திருவள்ளூா் அருகே பாதை மாறி குறுகலான சாலையில் சென்ால் 18 டன் இரும்பு ஏற்றி வந்த சரக்கு லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மகராஷ்டிரத்தில் இருந்து பெரும்புதூா் தொழிற்சாலைக்கு 18 டன் இரும்பு ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி திருவள்ளூா் அருகே வெள்ளிக்கிழமை காலை வந்தது. அப்போது, திருவள்ளூரிலிருந்து மணவாளநகா், போலிவாக்கம், கூட்ரோடு வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு செல்ல வேண்டும். அந்த சரக்கு லாரியின் ஓட்டுநா் திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் பிரியும் வெங்கத்தூா் குறுகலான சாலையில் சென்றுள்ளாா். மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையோரம் சேற்றுக்குள் சிக்கி தலைகுப்புற கவிழ்ந்தது. அதைத் தொடா்ந்து மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் விரைந்து வந்து பொக்லைன் வாகன உதவியுடன் அந்த லாரியை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

