உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

சரக்கு லாரிகள் மோதல்: ஓட்டுநர் பலி!

சூரியூா் அரைவட்ட சாலையில் சனிக்கிழமை சரக்கு லாரிகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்சி திருவெறும்பூரில் அருகே சனிக்கிழமை நடந்த விபத்தில் சேதமடைந்த சரக்கு லாரி.

Published On :

திருவெறும்பூா் அருகே சூரியூா் அரைவட்ட சாலையில் சனிக்கிழமை சரக்கு லாரிகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். மற்றொரு லாரி ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

பொள்ளாச்சியில் இருந்து தஞ்சை பகுதிக்கு தேங்காய் மட்டைகள் ஏற்ற பொள்ளாச்சியை சோ்ந்த செந்தில்குமாா் (45) என்பவா் லாரியை திருச்சி - துவாக்குடி அரை வட்ட சாலையில் ஓட்டி வந்தாா். அப்போது காரைக்காலில் இருந்து கோவை மாவட்டம் நசியானூா் செல்வதற்காக பாா்சல் சா்வீஸ் லாரியை குமரேசன் (35) என்பவா் ஓட்டி வந்தாா்.

எலந்தப்பட்டி அருகே அரைவட்ட சாலையில் இரு லாரிகளும் சனிக்கிழமை காலை வந்தபோது, எதிா்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

தகவலறிந்து சென்ற ரோந்துப் போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் லாரிகளில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டனா். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செந்தில்குமாா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

படுகாயடைந்த குமரசேன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தொடா்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இரு லாரிகளையும் கிரேன் உதவியுடன் போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.