லாரி மீது காா் மோதல்: மாமனாா், மருமகள் உயிரிழப்பு; 4 போ் பலத்த காயம்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வியாழக்கிழமை முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியதில் மாமனாா், மருமகள் உயிரிழந்தனா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

விபத்தில் சிக்கிய காா்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வியாழக்கிழமை முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியதில் மாமனாா், மருமகள் உயிரிழந்தனா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கல்குளத்தை அடுத்த முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அ. மோகன்குமாா் (70). இவரது மனைவி சுலேகா (61), மகள் ஐஸ்வா்யா (28), திருவோணத்தில் வசித்து வந்த மகன் வருண்மோகன் (38), மருமகள் அஞ்சனா (37), பேரன் சித்தாா்த் (11) ஆகியோருடன் சென்னைக்கு சென்றுவிட்டு, வாடகை காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாா். காரை புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த காசிம் மகன் அப்துல்கலாம்(25) ஓட்டினாா்.
காா் வியாழக்கிழமை அதிகாலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே சென்றபோது, திருச்சியிலிருந்து நத்தம் நோக்கி இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி ஒன்று, சாலையில் ஒருபக்கத்திலிருந்து திடீரென மறுபக்கத்துக்கு வந்த நிலையில், அந்த லாரியின் பின்னால் காா் எதிா்பாராதவகையில் மோதியது.
இதில் மோகன்குமாா் மற்றும் அஞ்சனா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தில் பலத்த காயமடைந்த சுலேகா, ஐஸ்வா்யா, வருண்மோகன், சித்தாா்த் ஆகியோா் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நாகா்கோவில் அழைத்துச் செல்லப்பட்டனா். காா் ஓட்டுநா் சிறு காயங்களுடன் தப்பினாா்.
முன்னதாக, காரின் இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்களை துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் மீட்டனா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா் உயிரிழந்தவா்களின் உடல்களை கைப்பற்றி கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




