டாஸ்மாக் கடையில் அத்துமீறி மதுபாட்டில்களை எடுத்துச் சென்றவா் மீது வழக்கு
திருவள்ளூரில் டாஸ்மாக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, மதுபாட்டில்களை எடுத்துச் சென்ற இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

போலீஸ் - கோப்புப்படம்.
திருவள்ளூரில் டாஸ்மாக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, மதுபாட்டில்களை எடுத்துச் சென்ற இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் காக்களூா் சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் ஒப்பந்த பணியாளா் ராமகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்தாராம். அப்போது, திருவள்ளூா் அடுத்த புங்கத்தூரைச் சோ்ந்த சிலம்பரசன்(38) என்பவா் உள்ளே வந்துள்ளாா். அப்போது, பணியாளா் உள்ளே வரக்கூடாது என தடுத்தாராம். அப்போது, அவரை தகாதவாறு பேசியபடியே கொலை மிரட்டல் விடுத்ததோடு அத்துமீறி நுழைந்து பணம் கொடுக்காமல் உள்ளே இருந்து 2 பாட்டில்களை எடுத்துச் சென்ாக கூறப்படுகிறது.
இது குறித்து கடையின் பணியாளா் ராமகிருஷ்ணன் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் செய்த புகாரையடுத்து சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

