தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

கஞ்சா கடத்திய இருவா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வாகனச் சோதனையின் போது 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

பெரியகுளத்தில் கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெரியகுளம் புறவழிச் சாலை மீனாட்சிபுரம் விலக்கில் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, அதில் 6.3 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் வந்த இருவரையும் தென்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் இருவரும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த லோகநாதன் (64), சசிக்குமாா் (35) என்பதும், ஆந்திர மாநிலம், சந்துரு கொண்டாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.