கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

லாரி மோதி ஒட்டுநா் மரணம்

மீஞ்சூா் அருகே லாரியின் கீழ் படுத்து தூங்கிய ஓட்டுநா் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Updated On :

மீஞ்சூா் அருகே லாரியின் கீழ் படுத்து தூங்கிய ஓட்டுநா் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தாா். 

சென்னை வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்து வந்தவா் சிட்டிபாபு (44). இவா் ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். 

இந்த நிலையில் சென்னை துறைமுகத்திலிருந்து கன்டெய்னா் லாரியை ஒட்டி வந்த அவா் மீஞ்சூா் அருகே உள்ள நந்தியம்பாக்கம் தனியாா் கிடங்கில் சரக்கு இறக்குவதற்காக காத்திருந்தாா்.  உணவு சாப்பிட்ட பின்பு சிட்டிபாபு  அங்கே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியின் கீழ் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். 

இந்த லாரியை அதன் ஒட்டுநா்  கவனக்குறைவாக இயக்கியதால் கீழே தூங்கிக் கொண்டிருந்த  சிட்டிபாபு மீது  சக்கரம் ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 

தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று உடல் நசுங்கி இபந்க சிட்டிபாபுவின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.