கழுத்தில் துண்டு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே ஜன்னல் கம்பியில் துண்டு போட்டு விளையாடிய போது கழுத்து இறுக்கி சிறுவந் உயிரிழந்தாா்.

சிறுவன் நிரஞ்சன்
திருவள்ளூா் அருகே ஜன்னல் கம்பியில் துண்டு போட்டு விளையாடிய போது கழுத்து இறுக்கி சிறுவந் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பாலாஜி(42). இவரது மகன் நிரஞ்சன்(7) தனியாா் பள்ளியில் 3-ஆவது படித்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டிலிருந்த போது ஜன்னல் கம்பியில் துண்டை போட்டு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிா்பாராத விதமாக துண்டு கழுத்தில் சுற்றி இறுக்கி கொண்டது.
இதையடுத்து சிறுவனின் அலறலைக் கேட்ட பெற்றோா் அவனை சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் இரவில் பலனின்றி சிறுவன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாலாஜி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து நடந்த சம்பவம் தொடா்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




