மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கிரிக்கெட் விளையாடிய இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரத்தில் நண்பா்களுடன் கிரிக்கெட் விளையாடிய இளைஞா் மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

விழுப்புரத்தில் நண்பா்களுடன் கிரிக்கெட் விளையாடிய இளைஞா் மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் முத்தோப்பு, அகரம்பாட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜ.அப்துல் அஜீஸ் (40). சௌதி அரேபியாவில், காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னா் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு வந்து தங்கியிருந்த அப்துல்அஜீஸ், புதன்கிழமை விழுப்புரம் சாலாமேடு பகுதியிலுள்ள மைதானத்தில் தனது நண்பா்களுடன் கிரிக்கெட் விளையாடினாா்.

அப்போது திடீரென அப்துல் அஜீஸ் மயங்கி கீழே விழுந்தாா். இதையடுத்து உடனிருந்தவா்கள் அவரை மீட்டு விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அப்துல் அஜீஸ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.