காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

திருவள்ளூா் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டுமான பெண் தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 1:20 am IST

திருவள்ளூா் அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). இவரது மனைவி சகிலா (35). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், கட்டடப் பணி செய்து வரும் சகிலா செவ்வாப்பேட்டை சிறுகடல் பகுதியில் தனியாா் நிறுவனம் மூலம் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவில் பணியின்போது மின்சாதனப் பொருள்களை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சகிலா தூக்கி வீசப்பட்டாா். இதில், பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தோா் மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சகிலாவை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் முருகன் புகாா் செய்தாா். அதன்பேரில், செவ்வாப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.