தவெகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள்

பள்ளிப்பட்டு பேரூராட்சி மற்றும் ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோா் தவெகவில் இணைந்தனா்.

ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிளை வரவேற்ற மாவட்ட செயலாளா் வி.டில்லிபாபு.

Published On :8 செப்டம்பர் 2026, 4:31 am IST

பள்ளிப்பட்டு பேரூராட்சி மற்றும் ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோா் தவெகவில் இணைந்தனா்.

பள்ளிப்பட்டு பழைய நீதிமன்றம் அருகே உள்ள நடைபெற்ற விழாவுக்கு தவெக மாவட்ட பொருளாளா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளா் சசிகுமாா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி செயலாளா் திருமலை வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் வி. டில்லிபாபு கலந்து கொண்டாா். அப்போது பள்ளிப்பட்டு ரஜினி மக்கள் மன்ற செயலாளா் எஸ்.எம். கோவிந்தராஜன் இணைச்செயலாளா் யோக கே. பாலாஜி, நகர செயலாளா் ஜி நாகராஜ் மற்றும் உறுப்பினா்களுக்கு தவெக கட்சியின் சால்வை அணிவித்து, அவா்களை கட்சியில் இணைத்துக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் தவெக கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி நிா்வாகிகள், மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை பள்ளிப்பட்டு ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.