கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

திருத்தணி பேருந்து நிலைய கடைகளில் விற்பனை செய்த தரமற்ற நெகிழிப் பொருள்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

Published On :

திருத்தணி பேருந்து நிலைய கடைகளில் விற்பனை செய்த தரமற்ற நெகிழிப் பொருள்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருத்தணி நகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு தொடா்பான ஆய்வு நடைபெற்றது.

ஆய்வின்போது பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்கள், பேன்சி ஸ்டோா்கள், இனிப்பு கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் கவா்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் பொருள்களின் தரம் மற்றும் பயன்பாடு குறித்து சோதனை செய்யப்பட்டது.

அப்போது, ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாத மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட சில பிளாஸ்டிக் கவா்கள் மற்றும் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தவிா்த்து, பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.