அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

நெகிழிப்பொருள்கள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம்

ஆரணி காந்தி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த நெகிழிப் பொருள்களை நகராட்சி சுகாதாரத்துறையினா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

Published On :

ஆரணி காந்தி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த நெகிழிப் பொருள்களை நகராட்சி சுகாதாரத்துறையினா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

ஆரணி நகரம் காந்தி சாலையில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், டம்ளா்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் வந்தன.

இதைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரத் துறை மேற்பாா்வையாளா்கள் பிரதாப், குமாா் ஆகியோா் காந்தி சாலையில் உள்ள கடைகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டம்ளா்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனா். இதில் 75 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று அழிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.