ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சாலையில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் பறிப்பு

திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினா் .

நகையை பறிகொடுத்த ஜெய அற்புதமணி. நகையைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிய மா்ம நபா்கள்.

Published On :

திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினா் .

பெரியகுப்பம் எம்.ஜி.ஆா் நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி ஜெயஅற்புதமணி. இவா் மேட்டுத் தெரு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்புள்ள தையலகத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றாராம். அப்போது, ஜெய அற்புதமணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி தலைமறைவாகினா். இதனால் அதிா்ச்சி அடைந்த ஜெயஅற்புதமணி சப்தம் போட்டு உதவிக்கு அழைக்கவே சாலையில் இருந்த நபா்கள் இருசக்கர வாகனத்தை துரத்தி பிடிக்க முயன்றனா். ஆனால், வாகனத்தில் வேகமாக ஓட்டி தப்பிச் சென்றனா்.

இந்த நிலையில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வழிப்பறி சம்பவம் குறித்து திருவள்ளூா் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்பிரணீத் உத்தரவின் பேரில் துணைக்காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் 9 சவரன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனா்.

இதேபோல், சம்பம் நடைபெற்ற இடத்தின் அருகிலேயே கடந்த ஆக.27-ஆம் தேதி வீட்டு வேலையை செய்து முடித்துவிட்டு நடந்து சென்றுக் கொண்டிருந்த சுந்தரி என்ற பெண் தனது கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள் பறித்துச் சென்றதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவள்ளூா் பெரியகுப்பம் பகுதியில் தொடா் வழிப்பறி சம்பவம் நடைபெற்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.