வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
காங்கயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காங்கயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரில் முஸ்லீம் வீதியில் வசித்து வருபவா் இந்திராணி (62). இவா், கடந்த 10 நாள்களுக்கு முன்பு பழனியில் குடியிருக்கும் மகன் வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா், செவ்வாய்க்கிழமை காங்கயத்துக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து இந்திராணி அளித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




