ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

டெங்கு தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட சுகாதார அலுவலா் பங்கேற்பு

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட சுகாதார அலுவலா் மரு. பிரியா ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திருத்தணியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட சுகாதார அலுவலா் பிரியா ராஜ்.

Published On :

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட சுகாதார அலுவலா் மரு. பிரியா ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் கலைவாணி முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் லீலா மனோகரன் வரவேற்றாா். இதில், மாவட்ட சுகாதார அலுவலா் பிரியா ராஜ் கலந்து கொண்டு, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி காந்தி சாலை, முருகப்பா நகா், பழைய சென்னை பைபாஸ் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாகச் சென்றது. இதில், மாணவா்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிறைவில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் முரளி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.