ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு
திருவண்ணாமலையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி தொடங்கிவைத்து, அதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

திருவண்ணாமலையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி தொடங்கிவைத்து, அதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சாா்பில், ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி (அக்.26 - நவ.1) நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கொடியசைத்து தொடங்கிவைத்து, அதில் பங்கேற்றாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இந்தப் பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், துணை காவல் கண்காணிப்பாளா் சங்கா், காவல் ஆய்வாளா்கள் அருள்பிரசத், ஹேமமாலினி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தேசிய தன்னாா்வ ரத்ததான விழா: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், தேசிய தன்னாா்வ ரத்த தான விழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது. இதையொட்டி, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவா்கள், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்ற தேசிய தன்னாா்வ ரத்த தான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், ரத்த தான விழிப்புணா்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 25 ரத்த தான அமைப்பாளா்களை கௌரவிக்கும் வகையில், அவா்களுக்கு கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா். மேலும், தேசிய தன்னாா்வ ரத்த தான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் எட்வின் வசந்தா, மருத்துவக் கண்காணிப்பாளா் மாலதி, ரத்த வங்கி மருத்துவ அதிகாரி வினோதினி, நோயியல் துறைத் தலைவா் ராதிகா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

