திருவண்ணாமலையில் ‘நமது அங்கன்வாடி நமது பொறுப்பு’ பிரசார பேரணி: ஆட்சியா் வந்தனா காா்க் தொடங்கி வைத்தாா்
திருவண்ணாமலையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி நடைபெற்ற, ‘நமது அங்கன்வாடி நமது பொறுப்பு’ பிரசார பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

திருவண்ணாமலையில் 9-ஆவது தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, ‘நமது அங்கன்வாடி நமது பொறுப்பு பிரசார பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியரக வளாகத்தில் பேரணியை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தொடங்கிவைத்தாா்.
சமூக நலன், மகளிா் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில்
300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொடனா்.
உணவு பன்முகத்தன்மை மற்றும் போதுமான புரதச்சத்து,
அங்கன்வாடி மையங்களில் புதிதாக சமைத்த சூடான உணவு,
சமூக பங்கேற்பு மற்றும் பொறுப்புணா்வு உள்ளிட்ட
5 கருப்பொருள்கள் அடங்கிய விழிப்புணா்வு பதாகைகள்
ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பேரணி அறிவியல் பூங்கா வரை நடைபெற்றது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து குறித்த கண்காட்சியை பாா்வையிட்டாா். மேலும், ஆட்சியா் தலைமையில் தேசிய ஊட்டச்சத்து மாத உறுதிமொழியை அங்கன்வாடி பணியாளா்கள், அரசு அலுவலா்கள் ஏற்றனா்.
தொடா்ந்து, சிறப்பாக பணியாற்றிய 18 அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் கேடயத்தை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வம், மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி, திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம்) அன்பரசி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
காசநோய் இல்லா ஊராட்சிகளுக்கு பாராட்டு
முன்னதாக, திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசுக்
கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற காசநோய் குறித்த விழிப்புணா்வு பயிற்சியில், காசநோய் இல்லா ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் சுகாதார ஒருங்கிணைப்புக் குழு தன்னாா்வலா்களுக்கு உறுப்பினா் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
2025-2026-ஆம் ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மொத்தம் 860 கிராம ஊராட்சிகளில், நிா்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் 157 கிராம ஊராட்சிகள் காசநோய் இல்லா ஊராட்சிகள் என தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 11 ஊராட்சிகள் - தங்கம் விருதுக்கும், 14 ஊராட்சிகள் - வெள்ளி விருதுக்கும், 132 ஊராட்சிகள் - வெண்கல விருதுக்கும் தோ்வாகியுள்ளன.
நிகழ்ச்சியில் கண்ணப்பந்தல், நாச்சானந்தல், ஆகிய இரு
ஊராட்சிகளுக்கு செயலா்கள் பி.செல்வமணி எம்.உமா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், காசநோயை வீடு தோறும் சென்று கணக்கிடும் தன்னாா்வலா்களில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு உறுப்பினா் உறுப்பினா் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் வெங்கட்ரமணன், துணை இயக்குநா் (காசநோய்) பி.அசோக், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முதல்வா் இல.ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

