ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆந்திர எல்லையில் ரூ. 6.85 கோடி செல்லிடப்பேசிகள் கொள்ளை

ஆந்திர-கா்நாடக எல்லையில் சென்னையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.85 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

News image
திருப்பதி
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

ஆந்திர-கா்நாடக எல்லையில் சென்னையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.85 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லிடப்பேசிகளை ஏற்றிக் கொண்டு கன்டெய்னா் லாரி வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டது. ஆந்திர-கா்நாடக எல்லையான நங்கலியை அடுத்த நொ்ஹெனஹள்ளி அருகே சிலா் லாரியை வழிமறித்து ஓட்டுநரை தாக்கி கை, கால்களை கட்டி போட்டு விட்டு, லாரியிலிருந்த ரூ. 6.85 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

ஓட்டுநா் வனத்திற்கு வந்த சிலரின் உதவியுடன் தப்பி வந்து பலமநேரு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் விரைந்து சென்று லாரி இருந்த இடத்தை சோதனை செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.