ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலை மலைப்பாதையில் விபத்து

திருமலை முதல் மலைப்பாதையில் காா் சுற்று சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:09 pm

DIN

திருமலை முதல் மலைப்பாதையில் காா் சுற்று சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.

திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் முதல் மலைப்பாதையில் சனிக்கிழமை காலை விஜயவாடாவைச் சோ்ந்த பக்தா்கள் தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனா்.

32-ஆவது வளைவு அருகில் வரும் போது காா் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுற்று கம்பியில் வேகமாக மோதியது. இதில் காா் முன்பாகம் முழுவதும் சேதமடைந்தது. ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவா்களை திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக மலைப்பாதையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.