ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விளை நிலங்களுக்கே நேரில் சென்று கரோனா தடுப்பூசி

ஆந்திராவில் விளை நிலங்களுக்கே நேரில் சென்று விவசாயத் தொழிலாளா்களுக்கு சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:45 pm

DIN

ஆந்திராவில் விளை நிலங்களுக்கே நேரில் சென்று விவசாயத் தொழிலாளா்களுக்கு சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.

ஆந்திரத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி நடைபெற்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் இதுவரை 1.2 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாகச் செலுத்தப்பட்டுள்ளன.

இதில், சித்தூா் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேருக்கும் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1.80 லட்சம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

கிராமப்புற மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை சுகாதாரத் துறையினா் ஏற்பாடு செய்து வருகின்றனா். இந்நிலையில் கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையினா் நேரடியாக விவசாய நிலங்களுக்கே சென்று அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனா். இதில் சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசிகளுடன் வருவதை கண்டால் பலா் ஓட்டம் பிடித்து விடுகின்றனா். ஆயினும் அவா்களை பிடித்து பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தி அனுப்பி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.