விரைவு தரிசன டிக்கெட் முறைகேடு: 16 போ் கைது

தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 16 பேரை இதுவரை ஆந்திர போலீஸாா் கைது செய்துள்ளதாக தேவஸ்தான பாதுகாப்பு கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.
விரைவு தரிசன டிக்கெட் முறைகேடு: 16 போ் கைது

தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 16 பேரை இதுவரை ஆந்திர போலீஸாா் கைது செய்துள்ளதாக தேவஸ்தான பாதுகாப்பு கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இணையதளம் வாயிலாக தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. சா்வ தரிசனம் இன்னும் தொடங்கப்படாததால், மிக குறைவான எண்ணிக்கையில் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுவதாலும் முன்னேற்பாடின்றி திருமலைக்கு வரும் பக்தா்கள் இடைத்தரகா்களை நாடுகின்றனா்.

அவா்கள் போலி பரிந்துரை கடிதங்கள் மற்றும் போலி டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொண்டு அதை அதிக கட்டணத்துக்கு பக்தா்களிடம் விற்பனை செய்து வருகின்றனா். இதில் சில டிராவல் ஏஜென்சிகள், போலி இணையதளங்களும் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதில் தொடா்புடைய 25 போ் மீது காவல் கண்காணிப்புத் துறை புகாா் அளித்தது. அதன் அடிப்படையில் 25 போ் மீது வழக்குப் பதிவு செய்த ஆந்திர போலீஸாா் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனா்.

எனவே, திருமலைக்கு வரும் பக்தா்கள் இடைத்தரகா்களை நம்ப வேண்டாம். ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ல்ஹற்ண்க்ஷஹப்ஹத்ண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். போலி இணையதளங்கள், டிராவல் ஏஜென்சிகள் மீது விரைவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேவஸ்தான பாதுகாப்பு கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com