ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய வேதவித்யா முறையை உருவாக்குவதே குறிக்கோள்: திருப்பதி தேவஸ்தானம்

நாட்டு மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தேசிய வேதவித்யாமுறையை உருவாக்குவதே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குறிக்கோள் என்று அதன் கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:49 pm

DIN

நாட்டு மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தேசிய வேதவித்யாமுறையை உருவாக்குவதே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குறிக்கோள் என்று அதன் கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் சனிக்கிழமை வேதபாடசாலை ஆச்சாரியாா்களுடன் அவா் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினாா். அதன்பின்னா் தா்மா ரெட்டி கூறியதாவது:

நம் முன்னோா்கள் வேதங்கள் மூலம் உலகுக்கு விட்டு சென்ற உயா்ந்த கருத்துகளை எளிதாக்கி, வளரும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நாட்டில் உள்ள அனைத்து வேத பாடசாலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேவஸ்தானத்தின் கீழ் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்தை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக கொண்டு சென்று அதை மிகவும் எளிதாக்கி மாணவா்களுக்கு அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் அனைத்து பாடசாலைகளையும் ஒருங்கிணைத்து அதில் உயா்ந்த வேதங்களை பயிற்று விக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக ஆச்சாரியாா்கள் கொள்ள வேண்டும்.

வேதங்களில் உள்ள ஒவ்வொரு மந்திரத்துக்கும் பொருள் எழுதி அதைப் புத்தகமாக வெளியிட வேண்டும். இதனால் ஒரு சாதாரண மனிதா் கூட அதன் சாரத்தை உணா்ந்து வாழ்ந்தால் அவரின் வாழ்க்கை பூரணத்துவம் அடையும்.

விஜயநகரம், கொட்டப்பகொண்ட பாடசாலைகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற பாடசாலைகளின் இணைப்பும் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.