ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் மத்திய அமைச்சா் எல்.முருகன் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

News image
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய மத்திய அமைச்சா் எல்.முருகன்.
Updated On :21 ஆகஸ்ட் 2021, 7:35 pm

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

மத்திய அமைச்சரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல்.முருகன் தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு திருமலை வந்தாா். அவா் தலைமுடி காணிக்கை செலுத்தி, சனிக்கிழமை ஏழுமலையானை வழிபட்டாா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு பிரசாதங்கள், திருவுருவப்படம் ஆகியவற்றை வழங்கினா்.

கோயிலை விட்டு வெளியே வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அமைச்சராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றியதாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.