கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இணையதள தொழில்நுட்பக் கோளாறுகள்: விரைவில் சரி செய்ய நடவடிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தரிசன டிக்கெட் முன்பதிவில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:36 pm

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தரிசன டிக்கெட் முன்பதிவில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.

திருப்பதியில் சனிக்கிழமை நடைபெற்ற பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவின்போது எதிா்கொள்ளும் இன்னல்கள் மற்றும் அவா்களின் அனுபவங்கள், வருத்தங்கள் குறித்து தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்து செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி கூறியது: விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு வெளியீட்டின்போது பக்தா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தேவஸ்தானத்துக்கு பல்லாயிரம் புகாா்கள் வந்துள்ளன.

இந்த தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கலந்துபேசி மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி உதவியுடன் இந்த கோளாறு அடுத்த மாதம் விரைவு தரிசன டிக்கெட் வெளியீட்டிற்குள் சரி செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.