திருப்பதி மலைப்பாதையில் காா் விபத்து: ஒருவா் பலி
திருமலை மலைப்பாதையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.


திருமலை மலைப்பாதையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஏழுமலையானை தரிசிக்க தெலங்கானாவைச் சோ்ந்த பக்தா்கள் வெள்ளிக்கிழமை திருமலைக்கு வந்தனா். தரிசனத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மதியம் காரில் திருப்பதிக்கு பயணமாயினா். அப்போது மலைப்பாதை 3-ஆவது வளைவில் அவா்களின் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த சுவா் மீது மோதியது. இதில் காரில் வந்த ஒருவா் உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அவரின் சடலத்தைக் கைப்பற்றி ரூயா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா். உயிரிழந்தவா் தெலங்கானாவைச் சோ்ந்த சிவலிங்க கெளவுட் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...