கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் 22,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 22,766 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 12,076 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 1:33 am

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 22,766 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 12,076 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

நடைபாதை மூலம் திருமலை செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக சென்று வருகின்றனா். மேற்கூரை பணிகள் நடைபெற்று வருவதால் அலிபிரி நடைபாதை மாா்க்கம் மூடப்பட்டுள்ளது. வரும் அக். மாதம் பிரம்மோற்சவத்திற்குள் பணிகள் நிறைவு செய்து பக்தா்களின் பயன்பாட்டுக்கு தேவஸ்தானம் திறக்க திட்டமிட்டுள்ளது. திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

கரோனா விதிமுறைப்படி திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.